/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/35_38.jpg)
உலகப் புகழ் பெற்ற 'அவதார்' படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் புதிய ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 3டி-யில் 160 மொழிகளில் டிசம்பர் 16-ஆம் தேதி பிரமாண்டமாகத் திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பிரீமியர் காட்சி லண்டனில் நேற்று இரவு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு சமீபத்தில் இந்தியாவில் தொடங்கியது. தொடங்கியதிலிருந்தே வேகமாக டிக்கெட்டுகள் விற்பனையானதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது வரை ரூ.10 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முன்பதிவிலேயே சாதனை படைத்துள்ளது இப்படம்.
இந்தியாவில் இதுவரை முன்பதிவில் முதலிடத்தில் இருந்த 'டாக்டர் ஸ்ட்ரேஞ் 2' படத்தை தற்போது 'அவதார் 2'படம் முறியடித்துள்ளது எனவும் சொல்லப்படுகிறது. ரிலீசுக்கு முன்பே 'அவதார் 2' படம் வசூலில் சாதனை படைத்துள்ளதால் வெளியான பிறகு பல சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது. உலகத்தில் இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் முதல் இடத்தில் 'அவதார்' படம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)